
மகளிர் உலகக்கோப்பை கபடிப் போட்டி 2025-ல் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“உலகக்கோப்பை மகளிர் கபடிப் போட்டி 2025-ல் வெற்றி பெற்று நாட்டிற்குப் பெருமை தேடித்தந்த இந்திய மகளிர் கபடிக் குழுவிற்குப் பாராட்டுகள்! அற்புதமான உறுதி, திறன் மற்றும் அர்ப்பணிப்பை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அவர்களது வெற்றி, நாட்டின் எண்ணிலடங்காத இளைஞர்கள் கபடிப் போட்டியில் பங்கேற்கவும், பெரிதாகக் கனவு காணவும், உயர்ந்த இலக்கை அடையவும் ஊக்குவிக்கும்.”