மகுவா மொய்த்ரா பதவி பறிப்பு : விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்…!

சென்னை:
அதானிவுடனான பிரதமரின் தொடர்பை அம்பலப்படுத்திய மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்பு என்பது ஒரு மோசமான முன்னுதாரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், M.P கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மகுவா மொய்த்ரா எம்,பி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதுதொடர்பாக மகுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்திய நாடாளுமன்ற நன்னடத்தை குழு தனது அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தது. இதையடுத்து மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை சபாநாயகர் மக்களவையில் நிறைவேற்றினார்.

இதையடுத்து மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.கவின் இந்த செயலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் M.P கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் தெரிவித்ததாவது;- பிரதமர்-அதானி உறவை அம்பலப்படுத்திய மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்பு மோசமான முன்னுதாரணம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் பதவியை அரசியல் காரணங்களுக்காக பறிப்பது தவறான செயலாகும். டிசம்பர் 29-ல் விசிக சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு திருச்சி சிறுகலூரில் நடைபெறும். அந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணி தலைவர்கள் கார்கே, டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு