அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு மணிப்பூர் சிறுபான்மை மக்கள் மீது திணிக்கப்படும் விசம பிரச்சாரத்தை பாதுகாக்க கோரி சென்னை, சைதாப்பேட்டையில் (கலைஞர் வளைவு) நேற்று ஆர்பாட்டம் நடத்தினர்.
அந்த ஆர்பாட்டத்தில்
- பாலியல் வன்கொடுமை செய்த பி.ஜே.பி. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் உடனடியாக கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதியும், உரிய பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.
- மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இயற்கை வளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்கும் சதி வேலையை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும். காடுகளில் வாழும் பழங்குடியின மக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும்.
- சிறுபான்மையின மக்களிடையே விசம பிரச்சாரத்தை உருவாக்கும் பாசிச கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மதச் சார்பின்மை, அரசமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்.
- மணிப்பூர் பழங்குடியின மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கி பழங்குடியின சங்கங்கள், அமைப்புச்சாரா தலைவர்கள், தொண்டர்கள் அரசுகள் கொண்ட குழுவை அரசுகள் உருவாக்க வேண்டும்.
- பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணியடங்களில் புகார் குழுக்குள் அமைக்கப்பட வேண்டும்
என ஒன்றிய அரசுக்கு 5 கோரிக்கைகள் வைத்துள்ளனர்.






