மணிப்பூர் வன்முறை குறித்து ஐரோப்பா விவாதிக்கும்போது, பிரதமர் மோடி ஏன் மவுனம் ? : ராகுல் காந்தி கேள்வி ?

மணிப்பூர் வன்முறையால் பற்றி எரியும் நிலையில், பிரதமர் இது குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் சென்றுயுள்ளார் எனறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மெய்தி சமூகத்தினருக்கும் குக்கி சமூகத்தினருக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக வன்முறை நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 150 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 3000 திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இன்னும் 60 ஆயிரம் பேர் அங்குள்ள 340 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டு விட்டன. மேலும் கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ள நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றம் மணிப்பூர் வன்முறை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ‘காலனித்துவ மனநிலையின் பிரதிபலிப்பு’ என்று கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘ இந்திய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஐரோப்பிய நாடாளுமன்றம் தனது நேரத்தை அதன் உள் பிரச்னைகளில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும்’ என்று கூறியுள்ளார்.

இதனிடையே பிரதமர் மோடி பிரான்சில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அங்கு பாஸ்டில் நாள் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்றிருந்தார். அங்கு அவருக்கு உயரிய விருது கொடுத்து கவுரவப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இதனை குறிப்பிட்டு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மணிப்பூர் பற்றி எரிகிறது. உள்நாட்டு விவகாரம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் விவாதிக்கிறது. ஆனால் பிரதமர் மோடி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இதற்கிடையில் பாஸ்டில் நாள் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்றிருக்கிறார்” என்று ராகுல் காந்தி கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.