மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள், செயலாளர்களுடனான 2 நாள் தேசிய மாநாடு புதுதில்லியில் இன்று நிறைவடைந்தது

புதுதில்லியில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற  மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள், செயலாளர்களுடனான 2 நாள் தேசிய மாநாடு இன்று நிறைவடைந்தது. மத்திய தொழிலாளர் இணையமைச்சர் செல்வி ஷோபா கரண்ட்லஜே, மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற ஐந்து அமர்வுகளில், பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் விரிவான விவாதங்கள் நடைபெற்றன. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட செயல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தலா 5 மாநிலங்கள் கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டன. பயிலரங்கின் போது நடந்த விவாதங்களின் அடிப்படையில், இந்தக் குழுக்கள் தங்களுக்குள் ஆலோசனைகளை நடத்தி, தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கான நிலையான மாதிரியை 2025 மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கும்.இப்பயிலரங்கில் பேசிய மத்திய அமைச்சர், கடந்த இரண்டு நாட்களில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வெளிப்படுத்திய சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்யுமாறு மாநில அரசுகளை வலியுறுத்தினார். அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை வடிவமைக்க மாநில அரசுகளுடன் அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என்றும் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஓய்வூதியம், சுகாதாரம், ஆயுள், விபத்து காப்பீடு போன்றவற்றை வழங்கும் முழுமையான மற்றும் நீடித்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கான அதாவது கட்டடம் மற்றும் கட்டுமானப் பணிகள், பிற துறைகளில் உள்ளவர்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தத் தொழிலாளர்களுக்கு நிலையான சமூக பாதுகாப்பு மாதிரிகளை உருவாக்க மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.இ-ஷ்ரம் இணையதளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களை இணைத்ததில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இப்பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.