திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மருத்துவர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் மற்றும் பல லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இரயில்வே நிலையம் அருகே, பிரபல குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையை நடத்தி வரும் மருத்துவர் பிரேம் குமார் தாஸ் என்பவரின் வீடு மருத்துவமனைக்கு அருகிலேயே உள்ளது. இந்நிலையில் சென்னையில் படித்து வரும் இவரின் மகளைப் பார்க்க மருத்துவர் பிரேம்குமார் தாஸ் சென்னைக்கு சென்றுள்ளார்.
மருத்துவர் வீட்டில் வேலை செய்யும் பெண் காலை வீட்டிற்கு வந்த போது விட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பிறகு மருத்துவரின் உறவினர்களுக்கு தகவல் அளித்தார். பின்னர் தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.






