மாவட்ட நிர்வாகம் சார்பில் 2025 பொங்கல் பொருட்கள் முறையாக வாங்குவதை உறுதிசெய்ய சிறப்பு கண்காணிப்புக்குழு

ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்குவதில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் ஆட்சியரிடம் கோரிக்கை.திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதில் குளறுபடி நிலவியதால் மக்களிடையே தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றதுஅப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு மகாராஜ் அவர்களிடம் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் மனு அளித்திருந்தார்அதன் விபரம்..பொங்கல் பண்டிகைக்கு திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலைகள் குறைவாக தான் வந்துள்ளன.மாவட்ட நிர்வாகம் சார்பில் 2025 பொங்கல் பொருட்கள் முறையாக வாங்குவதை உறுதிசெய்ய சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு அவர்களின் பெயர் தொடர்பு எண்கள் அறிவித்துள்ள நிலையில் ரேசன்கடைகளில் வேட்டி சீலை முறையாக வழங்க வில்லை என புகார் அளிக்க தொடர்பு கொண்டால் போன் எடுப்பதில்லைகுறிப்பாக திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள ராமமூர்த்தி நகர் – 2,ரேசன்கடை மற்றும் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் சாலையிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலை அருகிலுள்ள ரேசன்கடை எண் 4 மற்றும் கணபதி பாளையம் ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகிலுள்ள சௌடேஸ்வரி நகரிலுள்ள ரேசன் கடையிலும் வேட்டி சேலை முறையாக வழங்க வில்லை.அதேபோல் திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள போயம்பாளையம் சக்திநகரிலுள்ள தொட்டிபாளையம் ரேசன்கடை மற்றும் அவிநாசி நகரிலுள்ள ரேசன்கடைகளிலும் வேட்டி சேலை முறையாக வழங்க வில்லை. குறிப்பாக அவிநாசி நகரிலுள்ள ரேசன்கடைகயில் வேட்டி சீலை விற்பனையாளருக்கு வேண்டியப்பட்டவர்களுக்கு மட்டுமே போனில் அழைத்து வர சொல்லி ரகசியமாக கொடுத்து வருகின்றனர் என்றும் ஏழை எளிய நடுத்தர பாமர மக்கள் கடைக்கு என்ன தான் நடையாய் நடந்தாலும் வேட்டி சேலை முறையாக வழங்க வில்லை எனவும் பொது மக்கள் கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.மேலும் திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள போயம்பாளையம் சக்திநகரிலுள்ள தொட்டிபாளையம் ரேசன்கடையில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ள பயோ மெட்ரிக் உடன், கண் கருவிழி பதிவு மிஷின்களை தூக்கி மூலையில் போட்டு விட்டு விவசாயிகள் வயல்களில், உழைக்கும் கூழித்தொழிலாளர்கள் வேலை பார்த்துவிட்டு வருவார்களுக்கு முறையாக பொங்கல் தொகுப்பு மற்றும் வேட்டி சீலைகளை வழங்காமல் ரேகை பதிவாக வில்லை மாத கடைசியில் வா என மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பி அலைகழிப்பு செய்து வருகின்றனர்.முறையாக வேட்டி சீலை வழங்காதது தொடர்பாக சம்பந்தப்பட்ட ரேசன்கடையில் பொது மக்கள் கேட்டால் 40 சதவீதம் தான் வேட்டி சீலை வந்துள்ளதாக மிஷினில் அதிகாரிகள் பொய்யாக பதிவு செய்துள்ளனர் ஆனால் 20 , 30 சதவீதத்திற்கு குறைவாக தான் வேட்டி சீலை கடைக்கு வந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.எனவே உடனடியாக செயற்கையாக குழப்பங்களை ஏற்படுத்திய ரேஷன்கடைகளின் மீது உரிய நடவடிக்கை எடுத்து மாவட்ட பகுதிகளிலுள்ள அனைத்து தாலுகாவிலுள்ள அனைத்து ரேசன்கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்துள்ள வேட்டி சீலைகளை முறையாக முழுமையாக வழங்க விரைவாக உரிய தீர்வுகாண வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.