அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி : நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024

பாராளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் டி. சுரேஷ்தேர்தல் நடத்தும் அலுவலர்/மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையினை கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கைகளையும், காவல், தீயணைப்புத்துறை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையாளர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது :

நேற்று நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அமைதியான முறையிலும், சிறப்பாகவும் நடைபெற்றமைக்காக அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தத் தேர்தலில் பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய்த்துறை, மத்திய மற்றும் மாநில காவல்துறை, சென்னைப் பெருநகர காவல்துறை மற்றும் பிற துறைகள், தன்னார்வலர்கள் உட்பட 40,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணிபுரிந்தனர். இவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதிகளிலிருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இராணி மேரி கல்லூரி, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லயோலா கல்லூரி, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்பாக தேர்தல் பொது பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று சீல் வைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகள், வடசென்னையில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் தென்சென்னையில் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்த்து 18 சட்டமன்றத் தொகுதிகள் வரும். 

சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் 39.25 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 18 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்த்து 48.69 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிகளில் 60.13% வாக்குப்பதிவு, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளில் 54.27% வாக்குப்பதிவு, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளில் 53.91% வாக்குப்பதி என மொத்தம் 56.10% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு அறைகளில் 188 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மேலும், நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 1,095 காவல் பணியாளர்கள் மூலம் 3 சுழற்சி முறைகளில் 24 மணி நேரமும், மாநகராட்சி பணியாளர்கள் 24 நபர்கள் 3 சுழற்சி முறைகளில் 24 மணிநேரமும் கண்காணிக்கும் வகைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இராணி மேரி கல்லூரியிலும், அண்ணா பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பகுதிகள் முழுவதும் ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இராணி மேரி கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இந்நிகழ்வின் போது, தேர்தல் பொது பார்வையாளர் திரு. கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி,  இ.ஆ.ப.,  தேர்தல் நடத்தும் அலுவலர்/வடக்கு வட்டார துணை ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு : இணை இயக்குநர் / மக்கள் தொடர்பு அலுவலர்

பெருநகர சென்னை மாநகராட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி : நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube