சென்னை:
பசிலத்துன்னிசாபேகம் சாஹிபா எண்டோவ்மெண்ட்வக்ப்பின் நிர்வாகிகளான முகம்மது நயிமுர் ரகுமான், முகம்மது முஜிபுர் ரகுமான், முகம்மது உபைதுர் ரகுமான் ஆகியோர் தங்கள் பதவி காலம் 17.2.2022 அன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில் சட்ட விரோதமாக நிர்வாக குழுவில் செயல்படுவதுடன் முஹல்லாவை சேர்ந்த ஏழைகளின் மீது பி.பி. வழக்கு தொடர்ந்து ஏழை பெண்களை மிகுந்த மன உலைச்சலை கொடுத்துள்ளதாகவும், பசிலத்துன்னனிசா பேகம் சாஹிபா எண்டோவ்மெண்ட் வக்ப்பிற்கு சொந்தமான இடங்களை வாடகைக்கும், குத்தகைக்கும் கொடுப்பதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவர்களின் முறைகேடுகளுக்கு துணை போகாத வாடகை மற்றும் குத்தகைதாரருக்கு சட்ட விரோதமாக நிர்வாகிகளான முகம்மது நயிமுர் ரகுமான், முகம்மது முஜிபுர் ரகுமான் ஆகியோர் முறையற்ற பிபி வழக்கு தொடருவதை வக்பு நிர்வாக அதிகாரியும், அதைபற்றி விசாரிக்காமல் ஊக்கமளித்து வருவதையும் கண்டித்து மசூதியின் முகல்லாவை சேர்ந்த பெண்கள் மசூதி முன்பு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், நயிமுர்ரகுமான், முஜிபூர் ரகுமான் மற்றும் உபைதுர்ரகுமான் ஆகியோர் மீது வக்பு வாரியம் தக்க நடவடிக்கை எடுக்குமாறும், இவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், மூன்று பேரும் இனி மசூதியின் எந்தவித பொறுப்பிற்கும் தெரிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு