இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்றிரவு 11.30 மணி நிலவரப்படி, அந்தமான் நிகோபார் தீவுகளின் போர்ட்ஃ பிளேயரிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ளதாகவும் மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் மேலும் வலுப்பெற்று இன்று காலை புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோக்கா என பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, 14 ஆம் தேதி முற்பகல் மியான்மர் வங்கதேசம் இடையே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் உருவாகுவதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






