ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு…

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

ராஜஸ்தான் 199 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டபேரவை தொகுதிகளுக்கு இன்று நவம்பர் 25ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டு மீதம் உள்ள 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி வரை 24.74% வாக்குகள் பதிவாகியது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இன்ற மதியம் 1 மணி அளவில் 40.27% வாக்குகள் பதிவாகியது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56% வாக்குகள் பதிவாகியது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 68% வாக்குகள் பதிவாகியிருந்தன. ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களில் அதிகபட்சமாக ஜெய்சல்மர் மாவட்டத்தில் 77% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் எந்த வித வன்முறையும் மற்றும் அசம்பாவிதமும் ஏற்படாமல் பாதுகாப்பு பணியிலிருந்த மத்திய பாதுகாப்பு படையினர் கண்காணித்து பாதுகாப்பு பணியை திறம்பட செய்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.