ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகம் நரம்பியல் துறைக்குப் புதிய கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர துரித நடவடிக்கை : பொதுப்பணித்துறை

பொதுப்பணித்துறையின் சார்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது
மருத்துவமனை வளாகத்தில் ரூ.65 கோடியில்  நரம்பியல் துறைக்குப் புதிய கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர துரித நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு மருத்துவமனை. பழமையான இந்த மருத்துவமனையில் அனைத்துவகை நோய்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

2,500 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த அரசு மருத்துவமனையில்  10,000 முதல் 15,000 பேர் புறநோயாளிகளாக வருகை தந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் அமையப்பெற்றுள்ள  இந்த மருத்துவமனையில்  அனைத்து மருத்துவத் துறைகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவமனைக்கு மேலும் பெருமை சேர்க்கின்ற   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரையின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று மாண்புமிகு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களால்  அறிவிக்கப்பட்டது. இந்த   அறிவிப்பினை விரைந்து  செயல்படுத்திடும் பொருட்டு 65 கோடி ரூபாய் அனுமதித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

நரம்பியல் துறைக்கென்று புதிதாக உருவாக்கப்படும் இந்தக் கட்டடம் ஏறத்தாழ 1 இலட்சத்து 12 ஆயிரத்து சதுர அடியில் (10,428 ச.மீ.)  நான்கு தளங்களுடன் 220 படுக்கை வசதிகளோடு உலகத் தரத்தில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

இந்தக் கட்டடத்தில் தரைத்தளத்தில் நரம்பியல் மருத்துவ புறநோயாளிகள் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, கதிரியக்கவியல் பிரிவு , இயன் மருத்துவ பிரிவு போன்ற வசதிகள்அமையும்.

முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பொது வார்டுகள், மூன்றாம்தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள் போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

நான்காம் தளத்தில்  நவீன வசதிகள் கொண்ட 6 அறுவை சிகிச்சை  அரங்குகள்,  அறுவை சிகிச்சைக்கு முந்தைய அறை, மீட்பு அறை  போன்ற வசதிகள் இடம்பெறும்.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் இக்கட்டடத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொது கழிப்பிடம், 4 மின்தூக்கிகள், 2 படிக்கட்டுகள், சாய்வுதளம், மருத்துவ திரவ ஆக்ஸிஜன் இணைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற பிற வசதிகளுடன் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு சிறந்த நரம்பியல் துறை  மருத்துவ சேவைகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.