சென்னை:
அனுமதியின்றி பொருட்களை ஏற்றி வந்த வாகன ஓட்டுனரிடம் லஞ்சம் பெற்ற வணிக வரித்துறை சுற்றுப்படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ‘இவே’ பில் இல்லாமல் சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்களை திடீரென வணிக வரித்துறை சுற்றுப்படை அதிகாரிகள் பிடித்து அந்த வாகனத்தில் உள்ள மொத்த சரக்கின் மதிப்புடன் 200 மடங்கு அபராதம் விதிக்க வேண்டும் என்பது அவர்களுக்கான உத்தரவு ஆகும்.
இதன்படி கடந்த மே மாதம் 5ம் தேதி சென்னை அண்ணாசாலை, பூந்தமல்லி சாலை, கோயம்பேடு, இசிஆர் உள்ளிட்ட 14 இடங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். பூந்தமல்லி சாலையில் ‘இ-வே’ பில் இல்லாமல் சென்ற சரக்கு வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ‘இ-வே’ பில் இல்லையென்றால் பறிமுதல் செய்யும் மொத்த சரக்கின் மதிப்புடன் 200 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த அதிகாரிகள் போல் அத்தனைபேரும் இருப்பார்கள் என்று கூறிவிட முடியாது. கையூட்டு (லஞ்சம்) பெற்றுக் கொண்டு வாகனத்தை அனுப்பி வைக்கும் செயலும் நடந்து வருகிறது. அந்த வாகனத்தில் என்ன பொருட்கள் இருந்தாலும் அதைபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கடத்தல் பொருட்களாக இருந்தால்? கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களாக இருந்தால்? குற்றத் தொடர்பு உடைய பொருட்களை கடத்திச் செல்பவராக இருந்தால்? அந்த வாகனத்தை இயக்குபவர் வணிக வரித்துறை சுற்றுப்படை காவலர்களுக்கு சொற்ப பணத்தை லஞ்சமாக கொடுத்துவிட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் செல்வதும் வாடிக்கையாகிவிடுகிறது.
இதனை நிரூபிக்கும் வகையில் நேற்று மாலை சென்னை மூலகோத்திரத்துக்கும் சென்னை ரயில் நிலையத்துக்கும் இடையே யானை கவுனியில் வணிக வரித்துறை சுற்றுப்படையினர் (வண்டி எண்: டி.என்.06 ஜி.2230) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டி.என்.04 ஏவி6887 என்கிற எண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் வந்தவரிடம் பேசியபோது வாகனத்தில் கொண்டு வந்த பொருட்களுக்கு முறையாக பில் இல்லை என்பது தெரியவந்தது. உடனே அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர். அப்போது அந்த இடத்திற்கு வந்த அப்பகுதி காவல் நிலைய ரோந்து வாகன போலீசார் விசாரணை நடத்தி வணிக வரித்துறையினரிடமே ஒப்படைத்துவிட்டனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை வணிக வரித்துறையினர் அழைத்து வந்தபோது அதில் பயணித்தவர் பேரம் பேசிக்கொண்டே வந்துள்ளார். இறுதியாக சென்னை எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகே வாகனத்தை நிறுத்தி வணிக வரித்துறை சுற்றுப்படையினர் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர். இதில் அவர்கள் பேரம் பேசியதாக தெரிகிறது.
இதனை கவனித்த நமது பத்திரிகை ஆசிரியர் அவற்றை படம்பிடிக்க ஆரம்பித்தார். இதனை கண்டதும் சுற்றுப்படையினர் அவரிடமே ரூ.300 கையில் கொடுத்தனர். அதனை வாங்க மறுத்த ஆசிரியர் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை வணிகவரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கண்ணில் தென்பட்ட இதுபோன்ற செயல் யார் கண்களுக்கும் புலப்படாமல் எத்தனை நடக்கிறதோ என்று தெரியவில்லை. இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு உறுதுணையாக செயல்படும் வணிக வரித்துறை அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





