வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நேற்று நள்ளிரவு முதல் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

அதன்படி கீழை நாடுகளின் லூர்து நகர் என்று பெருமையுடன் அழைக்கப்படும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் சேவியர் மாநாட்டு பந்தலில் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்றிரவு கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பேராலய தியான மண்டபம் செல்லும் வழியில் மின் விளக்குகளால் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பேராலயத்தை சுற்றி அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நேற்றிரவு 11.30 மணிக்கு இயேசு பிறப்பு நிகழ்ச்சி வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது.

அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், மலையாளம், ஆகிய பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். சிறப்பு திருப்பலிக்கு பின்னர் குழந்தை இயேசுவை பவனியாக எடுத்து வந்து பேராலய அதிபர் இருதயராஜிடம் கொடுக்கப்பட்டது. அப்போது குழந்தை இயேசுவை தூக்கி காண்பித்து இயேசு பிறந்ததாக இரவு 12 மணிக்கு அறிவித்தார். பின்னர் பங்குத்தந்தை அற்புதராஜ், குழந்தை இயேசுவை பெற்று அருகிலுள்ள குடிலில் வைத்தார். இயேசு பிறந்த மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். அப்போது வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு