+1 மாணவர்களுக்கான நவீன சைக்கிள் திட்டத்துக்கு ரூ.277 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் சம்பத்குமார்

சென்னை:
பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை குறித்து அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில், ஆபத்து காலங்களில் மக்கள் 108-ஐ அழைப்பது போல் தமிழக மக்கள் தங்கள் அச்சத்தை போக்க எங்களுக்கு 108 எம்எல்ஏக்களை பரிசாக வழங்கியுள்ளார்கள்.
பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம் மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி வழங்குவதற்கு 11 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மாதந்தோறும் விடுதியில் ஆய்வு நடைபெறுகிறது. மாணவர் விடுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுதிகளில் காலி பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதியும் செய்து கொடுக்க முதல்வர் அறிவுறுத்தினார். விடுதிகளின் தூய்மை, அடிப்படை வசதிகள், உணவின் தரம் ஆகியவை கண்காணிக்கப்படுகிறது. மாணவர்களின் மீது அக்கறையுடன் இந்த அரசு செயல்படுகிறது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருவள்ளூர் அருகே ஆந்திர பெண் மீது முகத்தில் ஆசிட் ஊற்றி கொடூர கொலை… நீடிக்கும் மர்மம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டிக்குப்பம் கிராமம் எனும் கிராமம் உள்ளது. அங்குள்ள

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்:மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை தமிழக அரசு 6000 ரூபாய் உயர்த்த வேண்டும், உதவித் தொகைக்கு

தமிழக இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும்: முதலமைச்சர் விஜய் பதில் மனு

சென்னை:தமிழகத்தில் 2026ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய்,