சென்னை:
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பஸ்கள் (மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில்) வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை -1 உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை- 2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே. நகர் மற்றும் ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இன்று தொடங்கி வைத்தார் .
சுற்றுச்சூழலுக்கு உகந்த, நவீன வசதிகளுடன் கூடிய இந்தப் பேருந்துகள் மூலம் சென்னையில் பொதுப் போக்குவரத்து சேவை மேலும் மேம்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

காற்றில் பந்தததா அமைச்சர் ஆனந்தின் வாய்வழி உத்தரவு; சைதை அடையாறில் அகற்றப்படாத புதர்கள்- திடீர் பெருமழை பெய்தால் மக்களின் நிலை?
சென்னை:சென்னை அடையாறு ஆற்றில் தொடர் மழை மற்றும் நீர் திறப்பால் சைதாப்பேட்டை போன்ற






