+2 தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நேற்று +2ம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும்  இருந்து 2023 ம் ஆண்டு 8,03,385 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி 2023 ஆம் ஆண்டு 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 மாணவர்களுக்கு உரிய  மனநல ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கான மனநல ஆலோசனைகள் சென்னை, DMS வளாகத்திலுள்ள 104 உதவி மையத்திலிருந்து 20 மனநல ஆலோசகர்கள், முதலமைச்சரின் 1100 உதவி மையத்திலிருந்து 60 ஆலோசகர்கள் மற்றும் டெலிமனாஸ் 14416ல் இருந்து 20 ஆலோசகர்கள் கொண்டு இம்மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இம்மாணவர்களை மனநல மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதன்படி அனைத்து மாவட்டத்திலும் உள்ள தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி, மாணவர்கள் தவறான முடிவுகள் எடுக்காத வண்ணம் உரிய ஆலோசனை மனநல ஆலோசகர்கள் மூலம் வழங்க உரிய நடவடிக்கை  எடுக்கப்படுகிறது.

இதில் அதிக மனஅழுத்தம் உடைய மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கூடுதல் மனநல  ஆலோசனைகள்  மற்றும் தேவைப்படுவோர்க்கு மனநல மருத்துவர்களால் தொடர்ந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக அதிக மனஅழுத்தம் உள்ள மாணவர்களை இதன் மூலம் கண்டறிந்து மாவட்டத்தில் உள்ள மாவட்ட மனநல திட்ட அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்களால் நேரடியாக ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த ஆண்டைப் போல் இவ்வாண்டும் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் நலனில் அக்கறை உள்ள இவ்வரசு தொடர்ந்து மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400