3 மாத குழந்தை தடுப்பூசியால் இறக்கவில்லை – சுகாதாரத்துறை அதிகாரி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏ.கே. பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். விவசாயியான இவருக்கும் அழகியநத்தத்தை சேர்ந்த காந்தி பிரியாவிற்கும் திருமணமாகி தஸ்விக் ராஜ் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது.

காந்தி பிரியா தனது தாய் வீடான அழகியநத்தத்தில் தனது குழந்தையுடன் தங்கி இருந்தார். நேற்று கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி செலுத்தபட்டது. பின்னர் காந்தி பிரியா தனது குழந்தை தஸ்விக்ராஜை வீட்டுக்கு கொண்டு வந்தார். நேற்று இரவு திடீரென்று குழந்தைக்கு வயிறு உப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த காந்திபிரியா தனது உறவினர்களுடன் குழந்தை தஸ்விக்ராஜை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தஷ்விக் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக் ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், 3 மாத குழந்தை தஸ்விக் ராஜாவின் பெற்றோர் குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி தெரிவிக்கையில், ” கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை இறக்கவில்லை. கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று குழந்தைக்கு 2ம் கட்ட தடுப்பூசி போடப்பட்டது. வீட்டிற்கு சென்ற குழந்தைக்கு இரவு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதற்கு இயற்கை மருந்து கொடுத்துள்ளனர். அதன்பிறகுதான் குழந்தை இறந்துள்ளது. இந்த குழந்தையுடன் 6 குழந்தைகளுக்கு ஒரே தடுப்பூசியில் இருந்து மருந்து செலுத்தப்பட்டது. அனைத்து குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள். இந்த குழந்தையும் தடுப்பூசி போடப்பட்டு அரை மணி நேரம் கவனிப்பில் வைக்கப்பட்டு நலமுடன் இருப்பதை அறிந்த பிறகே வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். அதனால், குழந்தை தடுப்பூசி குறைப்பாடால் இறக்கவில்லை. குழந்தையின் இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய கடலூர் ஜி.எச் மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக குழந்தையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே குழந்தையில் இறப்புக்கான காரணம் தெரியவரும்” என்றார் சுகாதாரத் துறை அதிகாரி.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400