5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – வட மாநிலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது !

உத்தரபிரதேசம் கான்பூரில் 5 வயது சிறுமியை 7 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சி அலையை உருவாக்கி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் தேஹாத் மாவட்டத்தில், ஏழு வயது சிறுவன், ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மாவட்டத்தின் அக்பர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இது நடந்துள்ளது. சிறுமியின் தாய், தங்கள் அக்கம் பக்கத்தைச் சேர்ந்த பையன் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது தனது மகள் விளையாடுவதற்காக வெளியே சென்றிருந்ததாக ஐந்து வயது சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார். அந்த சிறுமியின் தாய் காவல்துறையை அணுகியதை அடுத்து, இரண்டு குழந்தைகளும் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ அறிக்கையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், செவ்வாயன்று சிறுமியின் தாயின் புகாரின் பேரில் போலீசார் ஐபிசி 376 மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 5/6 ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். குறிப்பிடத்தக்க வகையில், இந்திய தண்டனைச் சட்டம், 1860 இன் பிரிவு 82, அத்தியாயம் IV இன் கீழ், “7 வயதுக்குட்பட்ட குழந்தையால் செய்யப்படும் குற்றம் எதுவும் இல்லை” என்று கூறுகிறது. எனவே, ஏழு வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் குற்றவியல் பொறுப்பில் இருக்க முடியாது.

அக்பர்பூர் கோட்வாலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சதீஷ் சிங் கூறுகையில், இந்த வழக்கை போலீசார் எச்சரிக்கையுடன் கையாழுகிறார்கள். “ஏழு வயதுக்குட்பட்ட குழந்தை குற்றம் செய்தால், அது எந்த குற்றப் பிரிவில் வராது. இருப்பினும், சட்ட ஆலோசனைக்குப் பிறகே இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். செவ்வாய்கிழமை எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது,” என்றார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு