திருப்பூர் தளி – தேங்காய்களை கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தி தேங்காய்களை சாலையில் போட்டு உடைத்து விவசாயிகள் போராட்டத்தில் செய்தனர். இந்த போராட்டம் உடுமலை பகுதியில் தென்னை சாகுபடி பிரதானமாகும். கடந்த சில மாதங்களாக தேங்காய்க்கு உரிய விலை கிடைப்பதில்லை இதனால் தேங்காய் வியாபாரிகள் பெரும் பொருளாதார இன்னல்களுக்கு ஆளானார்கள். ஆனால் பராமரிப்பு, இடுபொருட்கள், தேங்காய் உரித்தல் உடைத்தல் என பல்வேறு பணிகளுக்கு கூலி அதிகமாக கொடுக்க வேண்டி உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் கோரி நீண்ட நாட்களாக வியாபாரிகள் கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.