1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. அடக்கமுடைமை
செருக்கில்லாமலும் எல்லை கடவாமலும் மனம் மொழி
மெய்களால் அடங்கி நடத்தல்
தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. (குறள் 129)
விளக்கம்:
தீயினால் சுட்ட புண் வெளியே புண்ணாக நின்றாலும் மனதில் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது; உடனே ஆறிவிடும். ஆனால் நாவின் சொல்லால் சுட்டவடு என்றுமே ஆறாது உள்ளத்தில் நிலைத்து நிற்கும்.







