இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவித்தார். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இமானுவேல் சேகரனின் பிறந்தநாள் நூற்றாண்டையெட்டி நகராட்சி இடத்தில் 3 கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் எனறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிப்பு வெளியிட்டார்.