சென்னை குரோம்பேட்டை 2023 நவம்பர் 6:-
குரோம்பேட்டை (இருப்பு) தாம்பரம் அரசு பொது மருத்துவமனையில் சீறுநீரகம் சரிவர இயங்காத நிலையில் உள்ள நோயாளிகளுக்காக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இரத்தமாற்றம் டயாலிஸ் மருத்துவ இரண்டு கருவிகளை தமிழ்நாடு அரசால் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு 2017 ல் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது டயாலிஸ் சிகிச்சை பெறுவதற்கு நோயாளிகள் வந்துபோகின்ற போது இங்கு டயாலிஸ் சிகிச்சை இல்லை என்று பயற்சி மருத்துவர்கள் சொல்லி திருப்பி அனுப்ப படுவதாக நோயாளிகளிடம் இருந்து புகார் வந்துள்ளது.
இந்த செய்தியினை அறிந்த தகவல் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு மாவட்ட நிருபர் இரா.மு. அருண்குமார் புகைபட கலைஞர் சி.சுகுமார் ஆகியோரிடம் புன்னகை என்கின்ற அமைப்பின் சார்பாக அதன் நிர்வாகியும் வெங்கடேஷ்வர திருமண மகால் உரிமையாளரும் சமூக செயற்பாட்டாளருமான மா.சந்திரகேசவன் அவர்களால் தகவல் கிடைக்க பெற்றது.
தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் மாவட்ட செய்தியாளர் இரா.மு.அருண்குமார் மற்றும் புகைப்பட கலைஞர் சி. சுகுமார் ஆகியோர் 06.11.2023 குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சென்று டயாலிஸ் சிகிச்சை குறித்து செய்தி சேகரிக்க மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்து டாயாலிஸ் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.
டயாலிஸ் பன்னுகிறோம் யாரும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள். வேலை ஆட்கள் பற்றாகுறையின் காரணமாக சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறதே தவிற டயாலிஸ் வரும் நோயாளிகள் இதற்க்கான உரியமருத்துவரை சந்தித்து சான்றிதழ் பெற்று மருத்துவர் குறித்து கொடுக்கும் தேதியில் சிகிச்சை அளித்தோ அல்லது அன்றோ நெகடிவ் பாஸ்டிவ் என்பதை கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்றவாறு சிகிச்சை அளித்து வருகின்றோம். ஆனாலும் சில நேரங்களில் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படுகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.