ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை 2023 போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் மகளிர் சக்தி மீண்டும் சிறப்பாக சாதனை படைத்துள்ளது!
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை 2023-ல் மதிப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற நமது நட்சத்திர ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள்! அவர்களின் அசாத்திய திறமை, அசைக்க முடியாத ஆர்வம், இடைவிடாத உறுதி ஆகியவை நம் இதயங்களை பெருமிதத்தால் நிரப்பியுள்ளன. சர்வதேச அரங்கில் நாட்டின் பெருமையை உயர்த்திய சாம்பியன்களுக்கு வாழ்த்துகள்!”