அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் A.M.விக்கிரமராஜா, நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து, சென்னை, கே.கே. நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகத் திறப்பு விழா வருகின்ற 19.11.2023 அன்று நடைபெற இருப்பதையொட்டி அதற்கான அழைப்பிதழை வழங்கினார்.
2. கழக இலக்கிய அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் வைகைச்செல்வன் அவர்கள், தனது பிறந்த நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
3) புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள V. சுரேஷ் நேரில் சந்தித்து,பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
4. கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷ்யாம்குமார் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பெற்றார்.
5. திருவள்ளுவர் மேற்று மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியக் கழக மாவட்ட பிரதிநிதி ஜி.கிருஷ்ணம் நாயுடு குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து தனது மகள் திருமணம் 16.11.2023 அன்று நடைபெற உள்ளதையொட்டி அதற்கான அழைப்பிதழை வழங்கினார்.
6. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட திமுக-வை சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் வாா்டு உறுப்பினர் எஸ்.எம். குப்புசாமி மற்று எழுமலை, செல்வராஜ், கலைமணி, தமிழ்வாணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் அஜித்ரகுமான் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நகரச் செயலாளர் என்.எஸ் பழனி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளும் ஆகமொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.