திருவாண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே துணை சபாநாயகர் மற்றும் எம்பி , எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற, அரசு விழாவில், செய்தியாளர்களை விழா நடைபெற்று முடியும் வரை 2 மணி நேரமாக நிற்க வைத்து, குடிக்க தண்ணீர் கூட தர மறுத்து அழைக்கழித்த நிகழ்வு நடந்துள்ளது.
ஜனநாயகத்தின் நான்வாவது தூண் பத்திரிகை. அந்த தூணை நிலை நிறுத்துபவர்கள் செய்தியாளர்கள். ஆனால் அவர்களுக்கு பல இடங்களில் பல பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது எதிரொலிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த தி.மு.க. விழாவில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது. தவித்த வாய்க்கு தண்ணீர் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். ஆனால் இந்த கூட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்கும் செய்தியாளர் தண்ணீர் இன்றி தவித்த நிகழ்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிட்ஸ் வெளியிட்டுள்ளன கண்டன பதிவில் , திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் ஆரணியிலிருந்து எட்டிவாடி வரையிலான இரண்டு வழி சாலையை நான்கு வழிசாலையாக மாற்றம் செய்யும் பணிக்கான பூமி பூஜை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தலைமையில் கடந்த நடைபெற்றது
இந்த விழாவில் சிறப்பு அழைப்பளாராக தமிழக பொதுப்பணிதுறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டபேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத், சட்ட மன்ற உறுப்பினர்கள் மாவட்ட, ஒன்றிய குழு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேடையின் எதிரே பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கென அமர இருக்கைகளை போடப்பட்டிருந்த நிலையில் அந்த இடத்தை திமுக பிரமுகர்கள் ஆக்கிரமித்து அமர்ந்திருந்தனர். இவர்களை இருக்கையில் இருந்து எழுப்பி பத்திரிக்கையாளர்கள் அமர்வதற்கு செய்தி மக்கள் தொடர்பதுறையினர் முன்வரவில்லை. இதனால் செய்தியாளர்கள் அமர்வதற்கு இருக்கைகள் கேட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோரிடம் முறையாக தகவல் தெரிவித்தனர். ஆனால் இதனை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலரும் கண்டும் காணாமல் இருந்ததாக தெரிகிறது.
இக்கூட்டம் நடந்து முடியும் நேரம் வரை சுமார் 2 மணி நேரமாக, 20 பேர் கொண்ட செய்தியாளர்கள் குழு மேடைக்கு அருகாமையில் கால் கடுக்க காத்து நின்று செய்திகளை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்
அரசாங்கத்தின் திட்டங்களை பொதுமக்களுக்கும் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளையும் அரசாங்கத்திர்க்கும் தெள்ளத் தெளிவாக அச்சு வடிவிலும் மற்றும் ஒளிப்பதிவு காட்சி வடிவிலும் எடுத்து செல்லும் இந்த செய்தியாளர்கள் அமர இருக்கையும் குடிக்க தண்ணீரும் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டும் தர மறுத்த செயல் கண்டனத்துக்கு உரியது.
ஆயிரக்கணக்கானோரை அழைத்து வந்து அமர வைத்து விழா நடத்த தெரிந்த அரசியல் கட்சியினருக்கும் அல்லது அவ்விழவை பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கின்ற அரசு அலுவலர்களுக்கும் செய்தியாளர்களுக்கு அமர வைத்து செய்து சேகரிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து தராமல் இருப்பது வெட்கக்கேடு. ஜனநாயகத்தின் 4ம் தூண் பத்திரிகை என்பது அவர்களுக்கு தெரியுமா , தெரியாதா?
செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு முறையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் கடமையாகும். அரசு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பங்கு முக்கியமானது. ஆனால், இந்நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவரின் கண் முன்னே டைபெற்று உள்ளது என்பது மிகுந்த வருத்தப்பட வேண்டிய ஒரு செய்தியாகும்.
இனி வரும் காலங்களில் அரசு நிகழச்சிகளில் பங்கேற்கும், செய்தியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்துதர, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரிய அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறையினருக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.