மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்றுசென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் இந்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் .ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரது படத்திறப்பு – புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, டாக்டர் மன்மோகன் சிங் திருவுருவப் படத்தைத் திறந்துவைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய் குமார், செயலாளர் சூரஜ் ஹெக்டே, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், தோழமைக் கட்சியின் தலைவர்கள் வைகோ, தொல். திருமாவளவன், சண்முகம், முத்தரசன், காதர்மொகிதீன், அப்துல் சமது, கொங்கு ஈஸ்வரன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.