நாகர்கோவிலில் மேலப்பெருவிளை ஊர் வடக்குஆற்றங்கரை சாலை பகுதியில் காணப்பட்ட பொதுப்பணித்துறை(PWD.) -க்கு சொந்தமான விலை மதிப்புமிக்க பெரிய பூவரசு மரத்தினை அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் (45), முத்துசாமி(59) மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து ஆசீட் திராவகத்தினை ஊற்றி பட்டுப்போக செய்து, எவ்வித அரசு அனுமதியுமின்றி சட்டவிரோதமாக காலை மேற்படி இவரும் சேர்ந்து அரசுத்துறை அதிகாரிகளுடனான நில ஆக்கிரமிப்பு தொடர்பான முன்விரோதம் காரணமாக மரத்தை வெட்டி சாய்த்து பொது சாலையின் குறுக்கே போட்டு போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.இக்குற்றசம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் சாலை போக்குவரத்து இடையூறை உடனடியாக நீக்குவார்களா?..என ஊர்பொதுமக்களது எதிர்பார்பாக உள்ளது