இராஜபாளையம் தொகுதியில் தெப்பத்தை சீரமைக்கும் பணி

இராஜபாளையம் தொகுதியில் இன்று (25.01.2025) காலை 9 மணியளவில்தேவதானம் அருள்மிகுதவம்பெற்ற நாயகி நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் தெப்பத்தை சீரமைக்கும் பணியை நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள் அருள்மிகு தவம்பெற்ற நாயகி நச்சாடை தவிர்த்தருளிய சுவமி திருக்கோவிலில் கடந்த 1989 ஆம் ஆண்டில் கடைசியாக தெப்பம் திருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தெப்பம் பழுதடைந்து காணப்பட்டதால் தெப்பம் திருவிழா நடத்தாமல் இருந்துள்ளது. அதனை அறிந்து நான் எதிர்கட்சி சட்ட மன்ற உறுப்பினராது முதல் தொடர்ந்து 8 ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டேன், மேலும் தமிழ்நாடு முதலமைச்சராக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதும் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்து 2021ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து சமய மாணிய கோரிக்கையில் கேள்வி எழுப்பினேன். அக்கோரிக்கையை ஏற்ற மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கையை பரிந்துரை செய்து 5.80 கோடி நிதி ஒதுக்கி 29/08/2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொளிகாட்சி மூலம் அடிக்கல் நாட்டி தெப்பத்தை சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நான் தொடர் ஆய்வு மேற்கொண்டு, பணியை துரிதப்படுத்தி தற்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே கோவில் செயல் அலுவலரிடம் பணிகளை விரைவில் முடித்து இந்த ஆண்டு மாசி மாதம் 30ம் தேதி (மார்ச் 12) தெப்பம் திருவிழா நடத்த வேண்டுமெனவும், பணி செய்யும் பணியாளர்களிடமும் திருவிழா நடத்த நீங்களும் ஒத்துழைத்து கொடுத்து விரைவில் பணியை முடித்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வில் செயல் அலுவலர் கலாராணி பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் சேத்தூர் சேர்மன் பாலசுப்ரமணியன் ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன் கிளை செயலாளர் அரிராம்சேட், முருகேசன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் சேகர் மற்றும் ஒப்பந்ததாரர், பணியாட்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

இராஜபாளையம் தொகுதியில் தெப்பத்தை சீரமைக்கும் பணி

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube