மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மை தகவல்கள்

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தை அடுத்து, மத்திய அரசு முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்தல், கடல்சார் நடவடிக்கைகளைப் பாதுகாத்தல், அப்பகுதியில் உள்ள இந்திய மக்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குதல் ஆகியவற்றில் முயற்சிகள் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றன.

இந்த முயற்சிகளின் தற்போதைய நிலை தொடர்பான சில முக்கியத் தகவல்கள் :

* ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள், எல்பிஜி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் அதிகத் திறனில் இயங்கி வருகின்றன. மேலும் போதுமான கச்சா எண்ணெய் இருப்பும் உள்ளது. நாடு போதுமான பெட்ரோல், டீசல் இருப்பையும் பராமரித்து வருகிறது.

* உள்நாட்டு நுகர்வுக்கு ஆதரவளிக்கும் வகையில், சுத்திகரிப்பு நிலையங்களில் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

* மத்திய கிழக்கு நெருக்கடியின் விளைவாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளில் அசாதாரணமான உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்கத்திலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் பொருட்டு, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹10 குறைப்பதன் மூலம், இந்தச் சுமையின் ஒரு பகுதியைத் தானே ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.

* உள்நாட்டுச் சந்தையில் இந்தப் பொருட்களின் இருப்பை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு டீசல் மீது லிட்டருக்கு ₹21.5, விமான டர்பைன் எரிபொருள் (ATF) மீது லிட்டருக்கு ₹ 29.5 ஏற்றுமதி வரியை விதித்துள்ளது.

* வதந்திகளை நம்ப வேண்டாம் என்ற அறிவுரையை அரசு மீண்டும் வலியுறுத்துகிறது. வதந்திகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, செய்தியாளர் சந்திப்புகள் மூலம் சரியான தகவல்களைப் பரப்புமாறு மாநில அரசுகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

* நுகர்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, டி-பிஎன்ஜி, சிஎன்ஜி-போக்குவரத்துக்கான விநியோகம் 100% மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* வணிக ரீதியான எல்.பி.ஜி கிடைப்பது குறித்த கவலைகளைத் தீர்க்கும் வகையில், நகர எரிவாயு விநியோக (CGD) அமைப்புகள் தங்களின் அனைத்து புவியியல் பகுதிகளிலும் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள் போன்ற வணிக நிறுவனங்களுக்கு பிஎன்ஜி இணைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

* சிஜிடி கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்குத் தேவையான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிப்பதை விரைவுபடுத்துமாறு, மத்திய அரசு, மாநில/யூனியன் பிரதேச அரசுகளையும், அமைச்சகங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

* மார்ச் மாதத்தில், வீட்டு உபயோகம், வணிகம், விடுதி, உணவகம், சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட 3.1 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றுடன் கூடுதலாக, 2.7 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய இணைப்புகள் வழங்கப்பட்டு, அவற்றுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

* அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் வழக்கமான ஒதுக்கீட்டிற்கு கூடுதலாக 48,000 கிலோலிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மத்திய அரசு, 27.03.2026 தேதியிட்ட கடிதம் மூலம், சரியான தகவல்களைப் பரப்புவதற்கும் வதந்திகளை ஒழிப்பதற்கும், அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களை தினசரி செய்தியாளர் சந்திப்புகளை நடத்தவும், சமூக ஊடகங்கள்/மின்னணு ஊடகங்களில் சரியான தகவல்களையும் வெளியிடவும் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.

* தற்போது, ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 16 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி வருகின்றன.

* பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் எல்பிஜி பதுக்கல், கள்ளச்சந்தையைக் கட்டுப்படுத்த சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 3000-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு, நேற்று 500-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

* தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்கும், பதுக்கல்/கள்ளச்சந்தை வழக்குகளைக் கண்டறிவதற்கும், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் அதிகாரிகள், நாடு முழுவதும் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

* மேற்கு ஆசியப் பகுதியில் இயங்கும் இந்தியக் கப்பல்கள், மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* அப்பகுதியில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் சம்பந்தப்பட்ட எந்த அசம்பாவிதமும் பதிவாகவில்லை.

*/485 இந்திய மாலுமிகளுடன் கூடிய 18 இந்தியக் கப்பல்கள் மேற்கு பாரசீக வளைகுடாப் பகுதியில் நிலை கொண்டுள்ளன.  கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

* கப்பல் போக்குவரத்து இயக்குநரக கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கி வருகிறது. இது செயல்படுத்தப்பட்டதிலிருந்து 4699 அழைப்புகளையும் 9364 மின்னஞ்சல்களையும் கையாண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 144 அழைப்புகளும் 290 மின்னஞ்சல்களும் பெறப்பட்டுள்ளன.

* கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உட்பட, இதுவரை 959-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

* இந்தியா முழுவதும் துறைமுகச் செயல்பாடுகள் இயல்பாக உள்ளன.

மாலுமிகளின் நலனையும், தடையற்ற கடல்சார் செயல்பாடுகளையும் உறுதி செய்வதற்காக, கப்பல் போக்குவரத்து அமைச்சகமானது, வெளியுறவு அமைச்சகம், இந்தியத் தூதரகங்கள், கடல்சார் துறையினருடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

* மேற்கு ஆசியப் பகுதியில் உள்ள இந்திய சமூகத்தினருடன் தொடர்ந்து தகவல் தொடர்பு பேணப்பட்டு வருகிறது. அவர்களின் பாதுகாப்பு, நல்வாழ்விற்காகத் தேவையான உதவிகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* மேற்கு ஆசியப் பகுதி முழுவதும் உள்ள தூதரகங்களும் அலுவலகங்களும் இரவு-பகல் பாராமல் இயங்கி வருகின்றன. அவை 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்களை இயக்குவதோடு, இந்திய சமூகம், சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்களுடன் தகவல் தொடர்பிலும் இருந்து வருகின்றன. புதுப்பிக்கப்பட்ட அறிவுரைகள், தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

* இந்திய தூதரகங்கள் உள்ளூர் அரசுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதோடு, மாலுமிகள், மாணவர்கள், இந்திய மக்களுக்கு விசா ஏற்பாடுகள், தூதரக சேவைகள், பிற ஆதரவு ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

* 2026 பிப்ரவரி 28 முதல்,  இப்பகுதியிலிருந்து சுமார் 5,72,000 பயணிகள் இந்தியாவிற்குத் திரும்பியுள்ளனர்.

* ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான திட்டமிடப்படாத விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

* ஓமன் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு விமானங்கள் தொடர்ந்து இயங்குகின்றன.

* கத்தார் வான்வெளி பகுதியளவு திறக்கப்பட்டுள்ளதால், இன்று இந்தியாவிற்கு சுமார் 8 முதல் 10 திட்டமிடப்படாத வணிக விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* குவைத் மற்றும் பஹ்ரைன் வான்வெளிகள் மூடப்பட்டே இருக்கின்றன. சவூதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு, திட்டமிடப்படாத வர்த்தக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

* ஈரானில் வான்வெளி மூடப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்தியக் மக்களின் பயணம் அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வழியாக எளிதாக்கப்பட்டுள்ளது.

* இஸ்ரேலில் உள்ள வான்வெளி கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இந்திய மக்களின் பயணம் எகிப்து மற்றும் ஜோர்டான் வழியாக எளிதாக்கப்பட்டுள்ளது.

* ஈராக்கில் வான்வெளி மூடப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்தியக் மக்களின் பயணம் ஜோர்டான் மற்றும் சவூதி அரேபியா வழியாக எளிதாக்கப்பட்டுள்ளது.

“நவீன சமூகத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குருத்துவம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும்.”

“நவீன சமூகத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குருத்துவம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும்.”⚫🔵🔴 “இது அதிகாரப்

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மை தகவல்கள்

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தை அடுத்து, மத்திய அரசு முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப்

2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்புக் கருவிகளின் குலுக்கல் முறையிலான இரண்டாம் கட்ட ஒதுக்கீடு, புதுச்சேரி, அசாம், கேரளத்தில் நிறைவடைந்தது

இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,  அசாம் மற்றும் மேற்கு வங்க

SDTU தொழிற்சங்கத்தின் மாநகராட்சியின் உறுப்பினர் பணி நிறைவு விழா மற்றும் 60வது திருமணம் மணி விழா நிகழ்ச்சி

SDTU தொழிற்சங்கத்தின் மாநகராட்சியின் உறுப்பினர் பணி நிறைவு விழா மற்றும் 60வது திருமணம்

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மை தகவல்கள்

“நவீன சமூகத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குருத்துவம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும்.”

“நவீன சமூகத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குருத்துவம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும்.”⚫🔵🔴 “இது அதிகாரப்

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மை தகவல்கள்

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தை அடுத்து, மத்திய அரசு முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப்

2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்புக் கருவிகளின் குலுக்கல் முறையிலான இரண்டாம் கட்ட ஒதுக்கீடு, புதுச்சேரி, அசாம், கேரளத்தில் நிறைவடைந்தது

இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,  அசாம் மற்றும் மேற்கு வங்க

SDTU தொழிற்சங்கத்தின் மாநகராட்சியின் உறுப்பினர் பணி நிறைவு விழா மற்றும் 60வது திருமணம் மணி விழா நிகழ்ச்சி

SDTU தொழிற்சங்கத்தின் மாநகராட்சியின் உறுப்பினர் பணி நிறைவு விழா மற்றும் 60வது திருமணம்