அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி ஆய்வாளரை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
நாய் கடியால் காயமடைந்த உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் போலீசார் தம்பதியரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஒருவரது பூர்வீக சொத்தை மீட்டுத் தருவதாகவும், தன்னை வழக்கறிஞர் என பொய்யாக கூறியும் சுமார் ரூ.6 லட்சம் மற்றும் கார் மோசடி செய்ததாக தம்பதியர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
தற்போது காவல் அதிகாரியை தாக்க நாயை ஏவிய குற்றத்திற்காக மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது







