அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் அரசியல் ஸ்டண்ட் அவ்வளவுதான்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை:
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரஃபேல் கடிகாரம் குறித்து அரசியல் ரீதியாக சர்ச்சைகள் வெடித்த நிலையில், இந்தகடிகாரத்தை வாங்கியதற்கான ரசீதை சித்திரை மாதம் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ரஃபேல் கடிகாரம் வாங்கியதற்கான ரசீதை வெளியிட்டார். மேலும், தனது வங்கி கணக்கு, சம்பள விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை, தான் அணிந்திருக்கும் ரஃபேல் கடிகாரம் பெல் அண்ட் ரோஸ் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டதாகவும், ரஃபேல் கடிகாரம் வரிசையில் 147-வது கடிகாரத்தை தான் வாங்கியதாகவும் கூறினார். «
காவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய்க்கு இந்த கடிகாரத்தை வாங்கியதாகவும் தெரிவித்தார். மாதம் 8 லட்சம் ரூபாய் செலவு செய்து வரும் நிலையில், வீட்டு வாடகை, காருக்கு பெட்ரோல் என எல்லாவற்றுக்கும் தனது நண்பர்கள்தான் உதவி வருவதாகவும் அண்ணாமலை கூறினார்.
அதைத்தொடர்ந்து ஏற்கனவே அறிவித்ததைப் போன்று திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அப்போது பேசியவர், வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல்களும் வெளியிடப்படும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பட்டியல் என்பது, அரசியல் ஸ்டண்ட் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். பாஜகவினருக்கு தொடர்புடைய பல்வேறு மோசடி புகார்கள் மீதான, மக்களின் பார்வையை திசை திரும்பும் நோக்கில், அண்ணாமலை செயல்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார். அவர், வெளியிட்ட பட்டியல் ஒரு பொருட்டே இல்லை எனவும் உதாசீனப்படுத்தியுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.