புதுடெல்லி:
வந்தே பாரத் ரயில் மணிக்கு 80 கி.மீ. வேகம் தான் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
வந்தே பாரத் ரயில் 100 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் வேகம் 180 கிலோ மீட்டர் என்றும் அனுமதிக்கப்பட்ட வேகம் 130 கி.மீ என்றும். புல்லட் ரயிலுடன் ஒப்பிட்டும் குறித்திருந்தனர். ஆனால் வந்தேபாரத் ரயிலின் வேகம் மணிக்கு 80 கி.மீ தான் என்கிற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
வந்தே பாரத் ரயிலின் வேகம் குறித்த விவரம் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்திர சேகர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில், 2021-22ம் ஆண்டில் வந்தேபாரத் ரயில் சராசரியாக 84.45 கி.மீ வேகத்தில் தான் சென்றது. 2022-23ம் ஆண்டில் 81.25 கி.மீ வேகத்தில்தான் பயணிக்கிறது. டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் ஒரே முறை தான் 95 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. இதற்கு தண்டவாளங்களின் மோசமான நிலை தான் காரணம் என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.