திருச்சி:
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் வரத்தொடங்கிவிட்டன.அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப் பட்டார். இதனால் மோதல் முற்றியது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொது செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரித்தது.
இந்தநிலையில் அதிமுகவில் தனக்கிருக்கும் செல்வாக்கை நிரூபிக்க திருச்சியில் பிரமாண்டமான முறையில் மாநாடு ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என்று ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி பொன்மலை ஜி.கார்னரில் வரும் 24ம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாள் விழாக்கள், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெற உள்ளது.
இந்நிலையில் திருச்சி பொன்மலை ஜி கார்னரில் ஓபிஎஸ் அணி மாநாட்டையொட்டி இன்று அதிகாலை 5.30 மணிக்கு பூஜையுடன் பந்தக்கால் நடப்பட்டது. இதில் ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து பிரமாண்டமான பந்தல் அமைப்பதற்காக ஜேசிபி மூலம் மாநாட்டு திடல் சுத்தம் செய்யும் பணி துவங்கியது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






