கோடநாடு கொலை- கொள்ளை விவகாரம்: ஓட்டுநர் கனகராஜுடன் டிஎஸ்பி செல்போனில் பேசியது உறுதி

கோவை:
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், சம்பவம் நடந்தபோது முதல்வராக இருந்த பழனிசாமியிடம் பாதுகாவலராக இருந்த டிஎஸ்பியும், விபத்தில் உயிரிழந்த கனகராஜூம் செல்போனில் பேசியதை உறுதி செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இச்சம்பவத்தின்போது, எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் விசாரித்த நீலகிரி மாவட்ட போலீசார், சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோடநாடு வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. கடந்தாண்டு செப்டம்பரில் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. எஸ்.பி. மாதவன் தலைமையில் கூடுதல் எஸ்.பி. முருகவேல், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் இவ்வழக்கை விசாரிக்கின்றனர். முன்னரே கைதானவர்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் என ஏராளமானோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக, கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தபோது தமிழ்நாடு முதல்வராக இருந்த பழனிசாமியிடம் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய காவல் உதவி ஆணையர் கனகராஜிடம் கடந்த வியாழக்கிழமை கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது ஆவடி ஆயுதப்படையில் உதவி ஆணையராக கனகராஜ் பணியாற்றுகிறார்.
கோடநாடு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சேலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் கனகராஜ், சம்பவம் நடந்த சில நாட்களில் சாலை விபத்தில் உயிரிழந்தார். கார் ஓட்டுநர் கனகராஜிடம், உதவி ஆணையர் கனகராஜ் பலமுறை செல்போன் மூலம் பேசியதை சிபிசிஐடி போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘2014 முதல் உதவி ஆணையர் கனகராஜூக்கும், உயிரிழந்த கனகராஜூக்கும் இடையே அறிமுகம் இருந்துள்ளது. நாளடைவில் இருவரும் செல்போனில் பேசும் அளவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோடநாடு கொள்ளைச் சம்பவம் நடப்பதற்கு முன்பு வரை, உதவி ஆணையர் கனகராஜூம், உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜூம் செல்போன் மூலம் 100-க்கும் மேற்பட்ட முறை பேசியுள்ளனர். ஆனால், சம்பவத்துக்கு பிறகு இருவரும் செல்போன் வழியாக பேசவில்லை. இவர்கள் செல்போன் மூலம் என்ன தகவல்களை பரிமாறிக் கொண்டனர் என்பதை ஆய்வகத்தின் உதவியுடன் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உதவி ஆணையர் கனகராஜிடம் விசாரித்தபோது, தெரிந்த நபர் என்பதால் நலம் விசாரிக்க தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், அது உண்மையா என்பது ஆய்வக முடிவுக்கு பின்னரே தெரியவரும்.
அதேபோன்று, கொள்ளை சம்பவத்தின்போது, நடந்த செல்போன் உரையாடல்களை கண்டறிய, திருச்சியில் உள்ள தொலை தொடர்பு நிறுவனத்தில் இருந்து சிடிஆர் பதிவுக்கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு, என்ன பேசினர் என்பதை கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் ஆய்வு தற்போது தொடங்கியுள்ளது’’ என்றார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.