கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 2023 நிறைவு: கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது…

கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சிகள் சில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதன்படி பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் காங்கிரஸ் சராசரியாக 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும், பாஜக 100-க்கும் குறைவான இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

224 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறும் என்று குறிப்பிடவில்லை. இருப்பினும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு சற்று கூடுதல் இடம் கிடைக்கும் என்றே குறிப்பிட்டுள்ளன.

மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.