இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். மார்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாகச் சென்று தாக்கியதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக கடற்படை அதிகாரிகள் கூறுகையில், கடற்பரப்பில் இந்திய கடற்படையின் ஆயுத பலத்தை பறைசாற்றும் வகையில் இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆயுத சோதனையானது தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு அடையாளம், இந்திய கடற்படையின் பலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என தெரிவித்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு