கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூ மற்றும் உணவுதானியங்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தினமும் லட்சக்கணக்கில் பொதுமக்களும் சிறிய வியாபாரிகளும் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்களில் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலையில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில், கோயம்பேடு காவல்நிலையத்தில் ஏராளமான புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடு்க்கபடவில்லை.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது; கோயம்பேடு மார்க்கெட்டுகளுக்கு வரும் வியாபாரிகளின் இரு சக்கர வாகனங்களை திருடி சென்றுவிடுகின்றனர். இதுகுறித்து கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. மார்க்கெட்டை சுற்றி 200க்கும் மேற்பட்ட நவீன கேமராக்களை அங்காடி நிர்வாகம் சார்பில் பொருத்தப்பட்டுள்ளது இந்த கேமராக்கள் சரியாக வேலை செய்கிறதா என்பது கேள்வி எழுந்துள்ளது ? இந்த நவீன கேமராக்கள் இருந்தும் ஏன் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்ந்து அதிகரித்து உள்ளது. இதனால் வியாபாரிள் மற்றும் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு மனஉளைச்லுக்கும் ஆளாகியுள்ளனர். எனவே கோயம்பேடு மார்க்கெட்டில் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்லும் கும்பலை கண்டறிய போலீசார் மிக தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று வியாபாதிகளும் பொதுமக்களும் எதிா்பார்கிறார்கள. கோயம்பேடு மார்க்கெட்டில் இதுவரை 65 இரு சக்கர வாகனங்கள் திருடுபோயியுள்ளன. ஆனால் போலீசார் அலட்சித்தால் இதுவரை எந்த இரு சக்கர வாகனமும் கண்டுபிடிக்கபடவில்லை என விபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.