அமெரிக்காவை மட்டும் நம்பியிருப்பது தவறு: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேச்சு……

விமானம் மற்றும் விண்வெளித்துறையை மையமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய நிகழ்வான பாரிஸ் ஏர் ஷோவின் துணை நிகழ்ச்சியாக ஒரு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏவுகணை எதிர்தாக்குதல் மற்றும் டிரோன் எதிர்தாக்குதல் மற்றும் அணுஆயுதங்களைத் தடுப்பது குறித்தும், உக்ரைனில் மாஸ்கோவின் முழு அளவிலான படையெடுப்பு அத்தகைய உபகரணங்களின் முக்கியத்துவத்தையும் செயல்திறனின் அவசியத்தையும் எடுத்து காட்டியிருந்தனர்.

இந்த கூட்டத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் சுவீடன் நாடுகளுடன் உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் ருமேனியா உள்ளிட்ட 20 ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் பிற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்: ஐரோப்பிய நாடுகளுக்கு வான்வெளி பாதுகாப்பில் சுயசார்பு தேவை. பாதுகாப்பு தளவாடங்களிற்காக அமெரிக்காவையே அதிகம் நம்பியிருப்பது தவறு. ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்த வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

நமக்கு இருக்கும் அச்சுறுத்தல் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், ஐரோப்பியர்களாகிய நாம் எதை உருவாக்க முடியும், நாம் என்ன வாங்க வேண்டும் எனவும் சிந்திக்க வேண்டும். விற்பனைக்கு என்ன இருக்கிறதோ அதனை உடனடியாக வாங்குவது தவறு. ஐரோப்பிய பாதுகாப்பு உபகரண உற்பத்தியாளர்கள் சுயாதீன ராணுவ அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

மேம்படுத்தப்பட்ட ஐரோப்பிய தரம் மிக முக்கியம். அமெரிக்கர்களிடமிருந்து நாம் அதிகமாக வாங்க வேண்டியிருப்பதற்கு காரணம், அவர்கள் தரத்தை மிகவும் மேம்படுத்தியிருக்கிறார்கள். மேலும் அவர்களே தங்கள் உற்பத்தியாளர்களுக்கு மானியங்களை வழங்கும் ஃபெடரல் ஏஜென்சிகளை வைத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட