முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நுற்றாண்டினை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் நேற்று 24.06.2023 கலைஞர் நூற்றாண்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது . அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோடம்பாக்கம் மண்டலம், புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ கருணாநிதி அவர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் திருமதி. ஷில்பா பிரபாகர் சதிஷ் இ.ஆ.ப., தமிழ்நாடு திட்ட இயக்குநர் திரு. மா.கோவிந்தராவ் இ.ஆ.ப. அவர்கள், துணை ஆணையாளர்கள் ஷேக் அப்துல் ரகுமான் இ.ஆ.ப., விஷு மஹாஜன் இ.ஆ.ப., அவர்கள், நிலைக்குழு தலைவர் பொது சுகாதாரம் கோ. சாந்தகுமாரி, கோடம்பாக்கம் மண்டலகுழுத்தலைவர் திரு. எம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மாமன்ற உறுப்பினர் மெட்டில்டா கோவிந்தராஜ் , மருத்துவ கல்வி இயக்குநர் மரு. சாந்தி மலர், ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. அரசி ஸ்ரீவட்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
