பெருநகர சென்னை மாநகராட்சியில் தொடர்புடைய சேவைத்துறை
அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான
ஆலோசனைக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர்
ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று 27.06.2023 ரிப்பன்
கட்டட வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் பிற சேவைத் துறைகளான சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு மின்சார வாரியம், பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தென்னக இரயில்வே ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி மற்றும்
திட்டப்பணிகளை பருவ மழைக்கு முன்னதாக முடிக்கவும், ஏதேனும் குறைகள் காணப்படின் அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்து பணிகளை விரைவில் முடிக்க உறுதுணையாக இருக்க வேண்டும். அனைத்து மண்டல அலுவலர்களும் பிற துறை சார்ந்த அலுவலர்களிடம் அவ்வப்பொழுது ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டு பிரதான பணிகளை ஒருங்கினைந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் இடங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்,
சாலைப்பணிகள் மேற்கொள்ளும் போது முறையான வழிகாட்டு
நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத்,
இ.ஆ.ப., இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப.,
வட்டார துணை ஆணையாளர்கள் திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு) , .எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., (மத்தியம்), .எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு) , சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் திரு. சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.







