ஆன்லைன் ரம்மியால் ராணுவ வீரர் தற்கொலை…..

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கீழக்கரந்தையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மகன் மணித்துரை (28). இவர் 2015 முதல் ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உதயசுருதி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த மணித்துரை, கடந்த 1-ம் தேதி அதிகாலையில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் அஞ்சலிக்கு பின் தகனம் செய்யப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட மணித்துரை, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளார் என தெரிகிறது. கடந்த 1-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கீழக்கரந்தையில் உள்ள அவரது தாய் கனக வேலம்மாளை செல்போனில் அழைத்து பேசியுள்ளார். அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்துவிட்டதாகவும், இதனால் கடன் ஏற்பட்டுள்ளதால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார். பேசிக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தந்தை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது. இவரது தற்கொலை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.