RCD கருவி – குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மனு…

திருப்பூர் – மின்சார இணைப்புகள் கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயமாக உயிர்காக்கும் சாதனத்தை மின்சார இணைப்புகள் கோரும் கட்டிடத்தில் RCD கருவியை பொருத்துவதை உறுதி செய்ய வேண்டுமென அவிநாசியில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மனு.

திருப்பூர் மாவட்டம் அவினாசி கோட்ட மின்சார வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டம் அவினாசி மங்கலம் சாலையிலுள்ள அவினாசி கோட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் திருமதி சுமதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் புதிய மின்சார இணைப்புகளுக்கு மின்கசிவைக் கண்டறியும் பாதுகாப்பு சாதனம் RCD கருவியை கட்டாயமாக பொருத்துவதை உறுதி செய்து விபத்துக்களை தடுக்க உரிய தீர்வுகாண வேண்டுவது சம்பந்தமாக நேரடியாக மனு அளித்தார்.

இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் கோட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி அவர்கள் , உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர், அதிகாரிகள் மற்றும் மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில செயலாளர் இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன், மற்றும் பொது மக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஈ.பி.அ.சரவணன் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது. திருப்பூர், அவிநாசி பகுதிகளில் மின்கசிவால் அவ்வபோது உயிரிழப்பு மற்றும் மின்சாதனங்கள் பழுதாகும் நிலை தொடா்ந்து நீடிக்கிறது இதைக் கட்டுப்படுத்தும் வகையில் எா்த் லீக்கேஜ் புரோடக்டிவ் டிவைஸ் என்ற சாதனம் மின்நுகா்வோா் அவசியம் பயன்படுத்த வேண்டுமென மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது ஆனால் இது காகித அளவில் மட்டுமே உள்ளது.

மின்சார இணைப்புகள் கேட்டு விண்ணப்பிப்போரின் இடங்களுக்கு அதிகாரிகள் நேரடியாக செல்லும் போது சம்பந்தப்பட்ட இடத்தில் RCD (residual-current device) சாதனம் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் அவ்வாறு இருந்தால் மட்டுமே மின்சார இணைப்பு வழங்க வேண்டும் இல்லாத பட்சத்தில் கட்டாயமாக மின்சார இணைப்புகளை வழங்கக்கூடாது என ஏற்கனவே மின்சார வாரியம் தெளிவாக விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் பெரும்பாலான இடங்களில் எவ்வித முறையான வழிமுறைகளை பின்பற்றாமல் இணைப்புகள் வழங்கப்படுவதே மின் விபத்துகளுக்கு காரணமாகின்றன.

புதிதாக வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், தெரு விளக்குகள், கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற உபயோகத்திற்கான ஒருமுனை, மும்முனை மின்சார இணைப்புகளிலும், தற்காலிக மின்சார இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின்சார இணைப்புகள் கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் மேற்கண்ட உயிர்காக்கும் சாதனத்தை மின்சார இணைப்புகள் கோரும் கட்டிடத்தில் RCD (residual-current device) கருவியை நிறுவி அதை விண்ணப்ப படிவத்தில் உறுதியளிக்க வேண்டும் RCD சாதனத்தை பொறுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் இல்லையேல் மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருப்பூர் அவிநாசி போன்ற பல்வேறு இடங்களில் விதிகளை பின்பற்றாமல் புதிய மின்சார இணைப்புகள் வழங்கும் போது RCD சாதனத்தை பொருத்தாத இடங்களில் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது இது போன்ற செயல்களால் தான் அவ்வபோது தேவையில்லாத மின் விபத்துக்கள் நடக்கின்றன.

இந்த RCD கருவியை பயன்படுத்துவதன் மூலம் மின்கசிவு ஏற்பட்டால், வீட்டுக்கு வரும் மின்சாரம் தானாக துண்டிக்கப்படும் இதன்மூலம் உயிரிழப்பு, பழுது போன்றவை தடுக்கப்படும்.

மேலும் திருப்பூர் அவிநாசி பகுதிகளில் மின்சார விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை அறவே தடுக்க வேண்டுமென்பது அனைவரின் நோக்கமாகும் இந்த RCD பாதுகாப்பு சாதனத்தை கட்டாயமாக பொருத்து வழிமுறையை அனைத்து பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று மின்சார பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்கள் ஏற்படுத்தி தேவையில்லாத மின்சார விபத்துகளை
முழுமையாக தடுக்க உரிய தீர்வுகாண வேண்டும்.

எனவே இனிவரும் காலங்களில் திருப்பூர் அவினாசி பகுதிகளிலுள்ள இடங்களில் புதிதாக மின்சார இணைப்புகள் கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயமாக உயிர்காக்கும் சாதனத்தை மின்சார இணைப்புகள் கோரும் கட்டிடத்தில் RCD கருவியை பொருத்துவதை உறுதி செய்து விபத்துக்களை தடுத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்