டுவிட்டர் பெயர், லோகோ மாற்ற இது தான் காரணம் – எலான் மஸ்க்..!

டுவிட்டர் லோகோவை நீல பறவையில் இருந்து X ஆக மாற்றுவதற்கான காரணத்தை எலான் மஸ்க் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் சேவையை தகவல் பரிமாற்றம் மற்றும் வர்த்தக பரிமாற்றங்களை மேற்கொள்வது என பரவலான தளமாக மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்து இருக்கிறார். இதையே அவர் எல்லாவற்றுக்குமான செயலி என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

“நிறுவனம் பெயரை மாற்றிக் கொண்டு, அதே பணிகளை மீண்டும் தொடரும் செயல் இது கிடையாது. 140 வார்த்தைகளில் தகவல் பரிமாற்றம் செய்த காலத்தில் டுவிட்டர் என்ற பெயர் அர்த்தமுள்ளதாக இருந்து வந்தது,” என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

புதிய X சேவையில் பேமன்ட் மற்றும் பேங்கிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என்று டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி லின்டா யாக்கரினோ தெரிவித்து இருக்கிறார். எலான் மஸ்க் டுவிட்டரில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் கடந்து, விளம்பரதாரர்கள் மற்றும் பயனர்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பொறுப்பை லின்டா யாக்கரினோ ஏற்றிருக்கிறார். டுவிட்டரின் விளம்பர வருவாய் பாதியாக குறைந்து இருப்பதாக எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். டுவிட்டரின் நேரடி போட்டியாளரான மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்க் நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டு இருக்கிறது. வெளியானதில் இருந்து அதிக பிரபலமாக இருந்துவந்த திரெட்ஸ் ஆப் டவுன்லோட்களில் பல சாதனைகளை படைத்தது.

இந்த நிலையில், டுவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் நடவடிக்கை காரணமாக, டுவிட்டர் தளம் மீதான கவனம் தற்போது அதிகரித்து இருக்கிறது. எனினும், இந்த நடவடிக்கை காரணமாக டுவிட்டர் நிறுவனத்தின் பிரான்டு மதிப்பில் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான சீனர்கள் பயன்படுத்தி வரும் விசாட் ஆப் பற்றி எலான் மஸ்க் பேசி இருக்கிறார். டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் உருவாக்கி இருக்கும் விசாட் ஆப் மெசேஜிங், ஆன்லைன் நிதி சேவைகள் மற்றும் நுகர்வோர் கடன் என எல்லாவற்றுக்குமான செயலியாக இருந்து வருகிறது. எனினும், எலான் மஸ்க் X செயலியை எப்படி உருவாக்க நினைத்திருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400