பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், உணவு பதப்படுத்தும் தொழில்களை அமைப்பதற்காக ரூ.15 கோடி வரை நிதி உதவியை வழங்குகிறது. இது நாட்டில் உணவு பதப்படுத்தும் துறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது, விவசாயிகளுக்கு சிறந்த விலைகளை வழங்க உதவுகிறது, குறிப்பாக கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது, விவசாய விளைபொருட்கள் வீணாவதைக் குறைக்கிறது.தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை அல்லாத விளைபொருட்களின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்து, விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்கும் நோக்கத்துடன் பிரதான் மந்திரி கிசான் சம்பதா திட்டத்தின் அங்கமாக, ஒருங்கிணைந்த குளிர்பதனச் சங்கிலி மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பிற்கான திட்டத்தை, உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், செயல்படுத்துகிறது.இந்தத் தகவலை உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இணையமைச்சர் ரவ்னீத் சிங் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






