இந்திய வருவாய் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசு துணைத்தலைவரை சந்தித்தனர்

இந்திய வருவாய் பணியின் (வருமான வரி) பயிற்சி அதிகாரிகள் (79-வது தொகுப்பு) இன்று  குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தனர்.பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், அவர்களை  நாட்டின் நிதி வலிமையின் பாதுகாவலர்கள் என்று வர்ணித்தார்.  நாட்டில் வளர்ச்சி நடவடிக்கைகள், வரிகள் மூலம் உருவாகும் வருவாயால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை வலியுறுத்தினார். வரி ஏய்ப்பு இல்லாததை உறுதி செய்யும் அதே வேளையில், வரி செலுத்துவோர் தேவையற்ற சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டவிரோத வருமானங்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும், நேர்மையான மற்றும் சட்டப்பூர்வமான வருவாய் பாராட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.வரி நிர்வாகம் மற்றும் பணம் செலுத்துதல்களில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், சில தனிநபர்கள் வரிகளைத் தவிர்ப்பதற்காக அமைப்புமுறையைக் கையாள முயற்சிக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற சம்பவங்களைக் கண்டறிந்து, உரிய வரிகள் செலுத்தப்படுவதை உறுதி செய்வது வரி அதிகாரிகளின் கடமை என்று அவர் கூறினார்.டிஜிட்டல் பரிவர்த்தனைகள், உலகமயமாக்கப்பட்ட நிறுவனங்கள், கிரிப்டோ கரன்சிகள் மற்றும் எல்லை தாண்டிய நிதி கட்டமைப்புகள் போன்ற சிக்கலான பிரச்சினைகளை வருவாய் பணி அதிகாரிகள் அதிகளவில் கையாள்வார்கள் என்று குறிப்பிட்ட அவர், வாழ்நாள் முழுவதும் கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், மேலும் பயிற்சி பெறுபவர்கள் அரசின் திறன் மேம்பாட்டு தளமான ஐ காட் (iGOT)-ஐ முழுமையாகப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைவதை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய சக்தியாக வருவாய் பணி அதிகாரிகள் ஒரு சிறப்புத் திறன் தொகுப்பைக் கொண்டுள்ளனர் என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அரசால் மட்டுமே அடைய முடியாது என்றும், குடிமக்களின் கூட்டு முயற்சிகளும் இருந்தால் அது முழுமையடையும் என்றும் கூறினார்.

பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாய விலைக் கடையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி,இன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்,சென்னைப்

செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் ‘தகவல் சரிபார்ப்பாளர்களாக’ ஊடகவியலாளர்கள் மாற வேண்டும்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை பத்திரிகை தகவல்