திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 27 ‘தவம்’ (உடலை வாட்டும் துறவறப் பயிற்சி)
குறள் 270:“இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்”
பொருள்:இவ்வுலகில் ஆற்றல் உள்ளவர் சிலராகவும் ஆற்றல் இல்லாதவர் பலராகவும் இருப்பதற்கு க் காரணம் தவம் செய்பவர் சிலராகவும் தவம் செய்யாதவர் பலராகவும இருப்பதே ஆகும் எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் மத்தேயு 9: 37ல் “தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்;” என்றும், லூக்கா 13:23-24ல்”அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” என்றும், மத்தேயு 7: 14ல் “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” என்றும்திருக்குறளும் திருமறையும் தவம் எனும் துறவற நற்பண்பை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை







