இன்றைய இயற்கை மருத்துவம்…

இன்றைய இயற்கை மருத்துவத்தில் தெளிவது. தமிழர்களின் உணவு முறைகள் நம் தமிழகம்
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தை வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” நம் குடி.
நாகரீகமாக இருந்தாலும் சரி, உணவுக் கலாச்சாரமாக இருந்தாலும் சரி உலகம் முழுக்க எடுத்துச் சென்றதற்கான மிகப்பெரிய ஆதாரங்கள் உள்ளது. நம் தமிழகத்தில்தான் ‘உணவே மருந்து’ என்ற ஒரு ஒப்பற்ற பின்பற்றுதல்
நம் உணவு பழக்க வழக்கத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதற்கான ஆதாரம் நம் சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு , எட்டுத்தொகை, கலித்தொகை போன்ற நூட்களில் குறிப்பிட பட்டுள்ளது.
நம் தமிழகத்தில் தான் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு உணவு பொருட்களுக்கும் அதன் தன்மை அறிந்தது அந்த காலத்திற்கு ஏற்ப அமுது படைத்தது நம் உணவு கலாச்சரம்.

சித்தர்கள் வகுத்த உணவு வழக்கம்:
தமிழகத்தில் தோன்றிய சித்த மருத்துவத்தில், சித்தர்களால் வழங்கப்பட்ட சித்த மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், எது உனக்கு உணவாக இருக்கிறதோ
அதுவே மருந்தாக இருக்க வேண்டும், எது உனக்கு மருந்தாக இருக்கிறதோ அதுவே உணவாக இருக்க வேண்டும்
என்ற கொள்கை. சித்தர்கள் “பதார்த்தகுண சிந்தாமணி” என்ற நூலை எழுதி அந்த நூலிலே நாம் சாப்பிடக்கூடிய
தண்ணீர், பாலின் வகைகள், பருப்பு, அரிசி யின் வகைகள். பால், வெள்ளாட்டுப் பால்,பசும் பால், காராம்பசு பால் , எருமைப் பால் என்று ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி அவற்றின் குணங்களை விளக்கி யுள்ளனர் .
அந்த உணவுப் பொருள்களுக்கான குணத்தை வகுத்து, ஒரு மனிதன் தன்னுடைய உடல் கூறுக்குத் தகுந்த
எந்த உணவை எந்தப் பருவகாலத்தில் சாப்பிடவேண்டும்? என்ற முறைகள் எல்லாம் தமிழர்களுடைய
பழங்கால வாழ்வியல் முறைகளில் எல்லாமே எழுதப்பட்டுள்ளது.

பாரம்பரிய சிறுதானிய உணவு:
தமிழர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய உணவுகள் என்று பார்க்கும் பொழுது சிறு தானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அதில் பிரதானமானது வரகு, திணை, குதிரை வாலி, சாமை.
இதனைத் தொடர்ந்து சாப்பிட்ட தமிழர்களுக்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்ததை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம் நம் பாட்டி தாத்தா சொல்லி கேட்டிருக்கிறோம். சிறு தானியங்களை உபயோகப்படுத்தும் பழக்கம் எல்லாத்தட்டு மக்களிடையுமே இருந்திருக்கிறது. அதாவது ஆடி, பொங்கல், தீபாவளி போன்ற தினங்களில் மட்டுமே அரிசி சோற்றை சாப்பிட்டு வந்த தமிழ்ச் சமூகம் ஒன்று இருந்தது. அது காலப்போக்கில் அன்னியர் ஆதிக்கத்திற்குப் பிறகு, மேற்கத்தியக் கலாச்சார மோகம் வந்த பிறகு
தினமும் அரிசிச் சோறு சாப்பிடக்கூடிய பழக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவுமே வேரூன்றக்கூடிய காலகட்டம் வந்தது. ஆக பாரம்பரிய சிறுதானிய உணவுகளைத் தினசரி பயன்படுத்தும் போது நோயின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. பண்டைய தமிழர்கள் சாப்பிட்ட உணவு களி ஆகும். காலை வேலையில் தோட்ட வேலைக்குப் போகக்கூடிய தமிழர்கள்.

ஒரு வெந்தயக் களி, உளுத்தங்களி, கேழ்வரகுக் களி, சோளக்களி , கம்புக்களி என உண்டு வந்தனர்.
களி என்பது திடப்பொருள் உணவாகும். இந்த மாதிரியான களியை உட்கொண்டு தோட்டத்திற்கு செல்லும்போது
அவர்களால் கடுமையான வேலைகளைக் கூட செய்ய முடிந்தது. ஊட்டத்திறன், உண்டாற்றல், உந்துசக்தி எல்லாமே அந்த உணவில் கிடைத்ததால் அவர்கள் செய்த வேலை என்பது மிகச்சிறந்த பயிற்சியாக அங்கீகரிக்கப்பட்டு உடலோம்பலும், அதன் மூலம் அற்புதமான ஆரோக்கியமும் அவர்களுக்குக் கிடைத்தது.

பண்டைய தமிழரின் உணவு:
தமிழ் இலக்கிய ஆதாரங்களைக்கொண்டது. வாழ்ந்த நிலத்துக்கேற்பவும் குலத்துக்கேற்பவும் பண்டைய தமிழரிடையே உணவுகள் வேறுபடுகின்றன. எனினும், அனேக தமிழர்கள் சோறும், மரக்கறியும், புலாணுவும், மதுவும் விரும்பியுண்டனர் என்பது தெரிகின்றது. நெற்சோறு, வரகுச்சோறு, வெண்ணற்சோறு, நண்டுக் கறி, உடும்புக் கறி, வரால்மீன் குழம்பு, கோழியிறைச்சி வற்றல், பன்றியிறைச்சி, முயல், ஈயல், மாங்கனிச் சாறு,
மாதுளங்காய்-மிளகுப்பொடி-கறிவேப்பிலை பொரியல், ஊறுகாய் என தமிழ்நாட்டில் வாழ்ந்த பலதரப்பட்டோர்
உண்ட உணவுகளை தமிழ் இலக்கிய சான்றுகள் உள்ளன.”கடுகு இட்டுக் காய்கறிகளை தாளிப்பது”,
“பசுவெண்ணையில் பொரிப்பது”, “முளிதயிர் பிசைந்து தயிர்க் குழம்பு வைப்பது”, கூழைத் “தட்டுப் பிழாவில் ஊற்றி உலரவைப்பது”, “மோரில் ஈயலை ஊறப்போட்டு புளிக்கறி சமைப்பது” போன்ற பழந்தமிழர் சமையல் வழிமுறைகளையும் சுட்டியுள்ளார். மேலும், தென்னைக் கள்ளு, பனங்கள்ளு, வீட்டில் சமைத்த “தோப்பி” என்ற ஒருவகைக் கள்ளு ஆகியவற்றை பழந்தமிழர்கள் விரும்பி உண்டனர் என்கிறார்.

உணவுண்ணும் முறைகள்:
தரையில் சப்பளாங்கால் போட்டு வரிசையாக அமர்ந்து உண்ணுவதே நம் தமிழர் பண்பாடு.
குடும்பத்தில் முதலில் பெரியவர்கள், வயதானவர்கள் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி விட்டு
அடுத்து இளையதலைமுறை சிறுவர்களுக்கு உணவு பரிமாறி, கடைசியாக வீடு பெண்டிர் உணவு சாப்பிடுவார்கள்.

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்:
• அருந்துதல் – மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
• உண்ணல் – பசிதீர உட்கொள்ளல்.
• உறிஞ்சல் – வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
• குடித்தல் – நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
• தின்றல் – தின்பண்டங்களை உட்கொள்ளல்.
• துய்த்தல் – சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
• நக்கல் – நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்.
• நுங்கல் – முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
• பருகல் – நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
• மாந்தல் – பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
• மெல்லல் – கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
• விழுங்கல் – பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய இயற்கை மருத்துவம்…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.