தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையே நீடித்தது. சவரன் ரூ.43,840க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.5,480க்கு விற்பனையானது. இன்றைய (ஆகஸ்ட் 29) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,000-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ.5,500ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5,970ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 47,760ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு ரூபாய் 20 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.80.20க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.82,000க்கும் என்ற நிலையில் உள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





