இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. விடுமுறை தினமான இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வழக்குடன் சேர்த்து பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்படுகின்றன.
வழக்கு தொடங்கியதும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் வாதங்களை முன் வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் முதல்வராக, நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார்.
ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல் எந்த காரணமும் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர், இது தன்னிச்சையானது, நியாயமற்றது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.